Sunday, 31 March 2013

hamsadthvani

ஹம்சத்வனி 

சதா சிவன் மைந்தனே கஜமுகனே சந்ததம் உந்தன் அருள் 
தந்தருள் விநாயகனே    [சதா]

பதார விந்தமலர் கதியென நம்பினேன் 
பரம்பொருளே அபயம் வரம் தருவாய் சரணம் 

துரிதம் 

கார்த்திகேயனின் காதல் வள்ளியை கடிமணம் செய்ய 
கரனாதிபா மூஷிக வாகன உன்னை நிதம் துதிக்க
எண்ணை ஆதரி கருவும் உருவும் நீ , காணும் யாவும் நீ,
கழல் தாராய் கணபதி மகிபா நின்னடி மறவா அன்புடன் 
மகாராஜன் பாட  வந்தருள் [  சதா ]

sreeragam

ஸ்ரீராகம் 

கணபதி என்னும் ஒரு மணி சிவன் கையில் கிடைத்த நவமணி 
அன்னை உமையவளின் திரு கண்மணி
 உலகம் காகவே வந்த அருள்மணி    [கணபதி
]
பனி வயிற்று பாலகனாகி  இப் பாரெங்கும் அவனே நாயகனாகி 
தினம் பக்தி செய்தால் நம்மை காப்வனும்
பெரும் சக்தி அள்ளித்து நல்ல முக்தி அளித்திடும்[கணபதி]

தம்பிக்கு உதவி செய்தவனே  தமிழ் நம்பிக்கு துணையாய் நின்றவனே 
என் அன்புக்கு பத்திரம் ஆனவனே என்றும் 
அருள்புரி விநாயக பெருமானே  [கணபதி] 
 

gowrimanogari

கௌரி மனோஹரி 

வல்லப கணபதியே வந்திடுவாய் 
வரங்களை வேண்டுவோருக்கு  தந்திடுவாய் மஹா [வல்லப]

நல்லதெல்லாம் உலகில் நாள் தோறும் நடந்திடவே 
எல்லாம் வல்லவனே ஈன்று அருள்வாய் மஹா [வல்லப]

ஆதித்யன்  சோமன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் 
சனிஸ்வரன் ராகு கேது என்ற 
எல்லா கிருககளும் நல்ல அருள் செயயே
பொல்லா பிள்ளையாரே போற்றி வந்தேன் மஹா [வல்லப]

hamsadthvani

     ஹம்சத்வனி 

       கணபதியே  கணபதியே  கணபதியே 
       நவ சக்தி கணபதியே நலம் தரும் வரம் கதியே 
       சிவா சக்தி கநேபதியே தவ சித்தி அருள் நிதியே 

       கஜமுகேனே  இங்கரனே 
       அமரர்கள் தொழுதிடும் உமை மகனே 
       ஒளியாய்  ஒளியாய்  உருமாரி விழியில் செவியில் குடியேறி 
       கலையாய் கவியாய் வருவாய் நீ நிலையாய் நிறைவில் வாழ்வாய் நீ 
       வித வித மாகவே அபிஷேகம் விபூதி குங்கும அலங்காரம் 
       கணபதியே நீ ஜெகஜோதி நம் கண்களில் பரவச அநுபூதி  [கஜ]
       வெள்ளிகாபுடன்  திருக்கோலம் எங்கள்

        வேழா   முகத்தவன் அருட்க்கோலம் 
        சொல்லில் அடங்கா சுடர்க்கோலம்  எங்கள் 
        தும்பிக்கை நாதனின் எழில் கோலம்
        தேவேந்திரனை திகழ் வாய் நீ 
         ராஜேந்திரனை வருவாய் நீ 
         ராகம் தாளம் தருவாய் நீ 
         கானம் ஞானம் அருள்வாய் நீ [க]