ஹம்சத்வனி
சதா சிவன் மைந்தனே கஜமுகனே சந்ததம் உந்தன் அருள்
தந்தருள் விநாயகனே [சதா]
பதார விந்தமலர் கதியென நம்பினேன்
பரம்பொருளே அபயம் வரம் தருவாய் சரணம்
துரிதம்
கார்த்திகேயனின் காதல் வள்ளியை கடிமணம் செய்ய
கரனாதிபா மூஷிக வாகன உன்னை நிதம் துதிக்க
எண்ணை ஆதரி கருவும் உருவும் நீ , காணும் யாவும் நீ,
கழல் தாராய் கணபதி மகிபா நின்னடி மறவா அன்புடன்
மகாராஜன் பாட வந்தருள் [ சதா ]