ஹம்சத்வனி
கணபதியே கணபதியே கணபதியே
நவ சக்தி கணபதியே நலம் தரும் வரம் கதியே
சிவா சக்தி கநேபதியே தவ சித்தி அருள் நிதியே
கஜமுகேனே இங்கரனே
அமரர்கள் தொழுதிடும் உமை மகனே
ஒளியாய் ஒளியாய் உருமாரி விழியில் செவியில் குடியேறி
கலையாய் கவியாய் வருவாய் நீ நிலையாய் நிறைவில் வாழ்வாய் நீ
வித வித மாகவே அபிஷேகம் விபூதி குங்கும அலங்காரம்
கணபதியே நீ ஜெகஜோதி நம் கண்களில் பரவச அநுபூதி [கஜ]
வெள்ளிகாபுடன் திருக்கோலம் எங்கள்
வேழா முகத்தவன் அருட்க்கோலம்
சொல்லில் அடங்கா சுடர்க்கோலம் எங்கள்
தும்பிக்கை நாதனின் எழில் கோலம்
தேவேந்திரனை திகழ் வாய் நீ
ராஜேந்திரனை வருவாய் நீ
ராகம் தாளம் தருவாய் நீ
கானம் ஞானம் அருள்வாய் நீ [க]
No comments:
Post a Comment